மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 'தலைவி' என்ற படம் உருவாகிறது. விஜய் இயக்கி வரும் இந்த படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறாராம். இந்த படத்துக்கு பாகுபலி, மணிகர்னிகா உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். இந்த படத்துக்கு விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் கபடி விளையாட்டை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள பங்கா படத்தில் முதன்மை வேடத்தில் கங்கனா நடித்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்கு சங்கர் எஷான் லாய் குழு இசையமைக்க, ஜே.ஜே பட்டேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் கபடி ஆர்வத்தால் அவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் நடக்கின்றன என்பதை இந்த படம் சொல்கிறது. இந்தப் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.