OSCARS: "அடடே.. ரொம்ப அழகா இருக்கீங்க".. தீபிகா படுகோனை புகழ்ந்து தள்ளிய கங்கனா ரனாவத் 😍..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆஸ்கார் விருது விழாவில் நடிகை தீபிகா படுகோனே பங்கு பெற்றதை கங்கனா ரனாவத் வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சோழர் வரலாற்றை மையமாக வைத்து புதிய படம்.. ஆசையை வெளிப்படுத்திய இயக்குனர் மோகன் ஜி..!   

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, சமீபத்தில்  கெஹ்ரையான், 83, பதான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு, தீபிகா படுகோனே கார்டியர் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராகவும் தீபிகா படுகோனே செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

நடிகை தீபிகா படுகோனே, 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.

பிரபலங்கள் எமிலி பிளண்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி. ஜோர்டான், ஜானெல்லே மோனே, ஸோ சல்டானா, ஜெனிஃபர் கான்னெல்லி, ரிஸ் அஹமட், மெலிசா மெக்கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் இந்த விருது வழங்குபவர்கள் பட்டியலில் அங்கம் வகித்தனர். அமெரிக்க நேரப்படி 95வது ஆஸ்கார் விருதுகள் விழா ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 12, 2023 நேற்றிரவு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிகழ்வில் தீபிகா படுகோனே கலந்து கொண்டு நாட்டு நாட்டு பாடலை அறிமுகம் செய்து வைத்தார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கங்கனா ரனாவத், தீபிகா படுகோனேவை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அந்த ட்வீட்டில் "எவ்வளவு அழகாக உள்ளார் தீபிகா படுகோனே. ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைத்து, அதன் முகமாக, அதன் நற்பெயரை தோள்களில் சுமந்துகொண்டு, மிகவும் அன்பாகவும் நம்பிக்கையுடனும் பேசுவதைப் பார்ப்பது எளிதல்ல. இந்தியப் பெண்கள் சிறந்தவர்கள் என்பதற்கு தீபிகா சாட்சியாக நிமிர்ந்து நிற்கிறார்". என கங்கனா ரனாவத், தீபிகா படுகோனே குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Also Read | செம்ம ஸ்டைலான புது லுக்கில் LEGEND சரவணன்.. வைரல் ஃபோட்டோ.. அடுத்த படத்துக்கா..?

தொடர்புடைய இணைப்புகள்

Kangana Ranaut tweet about Deepika Padukone Oscars Entry

People looking for online information on Deepika Padukone, Kangana Ranaut, Kangana Ranaut Tweet, Oscars 2023 will find this news story useful.