ஃபோட்டோவே இப்படினா படம் வேற லெவல்தான்! ட்ரெண்டாகும் “தலைவி” படத்தின் வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தில்  பாலிவுட்  நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் சமுத்திரகனி, பிரியாமணி, பாக்யஸ்ரீ, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் புரொமோசனுக்கான  வேலைகள் தெடங்கி நடந்து  வருகிறது. இப்படத்தின் முக்கியமான  சில ஃபோட்டோஸ் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

சமீபத்தில் இப்படம் தணிக்கைக்குழுவால் தணிக்கை செய்யப்பட்டு 'U' சான்றிதழ் வழங்கப்பட்டது. விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

பாகுபலி படத்தின் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படத்தின்  வெளியீடு குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பபடுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Kangana ranaut thalaivi movie photos released

People looking for online information on Aravi, Arvind Swamy, Kangana Ranaut will find this news story useful.