கங்கனா நடிக்கும் பயோபிக் படமான 'தலைவி!'.. போஸ்டருடன் வெளியான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வரும் திரைப்படம் தலைவி.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது. ஏற்கனவே இந்த திரைப்படம் வெளியாகும் என காத்திருந்த நிலையில்  கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த திரைப்படத்தின் வெளியீடு என்பது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இதனிடையே இந்த திரைப்படத்தின் சென்சார் அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. புதிய போஸ்டருடன் இந்த சென்சார் அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி தலைவி திரைப்படம் சென்சாரில் யு சான்றிதழ் பெற்றிருக்கிறது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் தலைவி திரைப்படம் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படவிழா ஏற்கனவே சென்னையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: : Beast First Look பார்த்துட்டு...தளபதி விஜய் கொடுத்த Reaction என்ன? இயக்குநர் பகிர்ந்த வைரல் Secret!

Kangana Ranaut Thalaivi censor update with new poster

People looking for online information on Arvind Swami, Kangana Ranaut, Thalaivi, Vijay will find this news story useful.