தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களை பாலிவுட் சிதைக்க கூடாது... நடிகை கங்கனா ரனாவத் ஆவேசம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களை சிதைக்க அனுமதிக்கக்கூடாது என  பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படம் உலகளவில் இந்திய திரைப்படங்களுக்கான கோலோச்சி பாராட்டும் வகையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக பாலிவுட் ரசிகர்கள் தென்னிந்திய படங்களை ரசிப்பது அரிது தான். பிரபல நாயகர்களின் திரைப்படம் மட்டுமே டப் செய்யப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்படும்.

பாகுபலி படத்தினை தென்னிந்திய சினிமா ரசிகர்களை விட பாலிவுட் ரசிகர்கள் அதிகாமாக கொண்டாடினர். இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை டிரெண்டாக்கினர். அதேபோன்று யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் முதல், வசனங்களை இந்தி பேசும் மக்களை வெகுவாக கவர்ந்தது. இதன் தொடர்ச்சிதான் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் பான் இந்தியா என்ற பெயரில் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது.

இப்படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா, சாமி சாமி பாடல் மற்றும் வசனங்களுக்கும் அதீத வரவேற்பு கிடைத்தன. இதுபோன்ற படங்களால் தென்னிந்திய சினிமாக்களுக்கென்று வடக்கில் தனி மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளனர். இதனிடையே சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று  கேஜிஎப் -2, புஷ்பா -2 படத்தை பற்றிய செய்திகளை வெளியிட்டது.

"நடிச்ச 4-ம் Flopங்க".. ஐயோ சிரிக்குறாங்களே.. ஒரே நாள்ல fans-ஐ அள்ளிய பிரபல நடிகரின் பேத்தி! CWC 3

இந்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பதிவை ஷேர் செய்து, தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களின் கதையை சிதைக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் இந்திய கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளனர். அவர்கள் தங்களின் குடும்பத்தினரை நேசிக்கிறார்கள். அவர்களுடய உறவுகள் மேற்கத்திய மயமாகப்படவில்லை. தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களின் தொழில்முறை மற்றும் ஆர்வம் இணையற்றது. பாலிவுட் திரையுலகம் அவர்களை சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்று பதிவிடுள்ளார்.

மகள் Vamika புகைப்படம் லீக்.. தாயாக பரிதவிப்புடன் அனுஷ்கா சர்மா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!

அந்தப் பதிவில், புஷ்பா' படத்தின் ஓ அண்டாவா பாடல் இசைக்க, அல்லு அர்ஜூன், யாஷ் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Kangana Ranaut posted praising South Indian actors on social media

People looking for online information on பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், Kangana Ranaut, Praising South Indian actors will find this news story useful.