சந்திரமுகி-2 படத்தில் இணையும் பிரபல முன்னணி நடிகை? தரமான அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்திரமுகி-2 படத்தில் பிரபல முன்னணி நடிகை இணைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertising
>
Advertising

Also Read | சமந்தா நடிக்கும் புதிய படம்.. இணைந்த அல்லு அர்ஜுன் மகள்?.. செம்ம அப்டேட்!

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் மைசூரில் பூஜையுடன் துவங்கியது.

  'சந்திரமுகி 2'  திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்க, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் மேற்பார்வை செய்கிறார்.

இப்படத்தினை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு இயக்குகிறார். இப்படத்தில் நடிகை ராதிகா, நடிகர் வடிவேலு,நடிகர் ரவி மரியா, மனோபாலா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் சில நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது. இந்த படப்பிடிப்பில் நடிகை ராதிகா & நடிகர் வடிவேலு மற்றும் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டனர். 

பின்னர் சந்திரமுகி 2 படத்திற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது உடலமைப்பை மாற்றிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு & தோட்டா தரணி கலை இயக்குனர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐத்ராபாத் நகரில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர். சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர்.

2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்தாண்டு சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

Also Read | மாரி செல்வராஜின் புதிய படம்.. உதயநிதி தொடங்கி வைத்த ஷூட்டிங்! நடிகர்கள் விவரம்

தொடர்புடைய இணைப்புகள்

Kangana Ranaut is playing an important role on Chandramukhi 2 Deets

People looking for online information on Chandramukhi 2, Kangana Ranaut, Raghava Lawrence, Vadivelu will find this news story useful.