நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர்.
Also Read | ஜான்வி கபூர் நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்.. பிரபல OTT-ல எப்போ ரிலீஸ்?
சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர். 2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தார்.
சமீபத்தில் கெஹ்ரையன், காஷ்மீர் பைல்ஸ், கங்குபாய் படங்களுக்கும், ஆஸ்கார் - கிராமி விருதுகள் குறித்து கங்கனா தெரிவித்த கருத்துக்கள் விவாதத்தை கிளப்பின. கடைசியாக கங்கனா ரனாவத், ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமான 'தாகத்' படத்தில் நடித்து இருந்தார்.
கங்கனா ரனாவத் தனது அடுத்த படமான எமர்ஜென்சிக்கான முன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் BTS புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். இப்படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
கங்கனா ரனாவத் எமர்ஜென்சி படத்துக்காக புகழ்பெற்ற செயற்கை மேக்கப் கலைஞர் டேவிட் மலினோவ்ஸ்கியைப் படக்குழுவில் இணைத்துள்ளார். மேக்கப் கலைஞருடன் எடுத்த ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்ட கங்கனா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "எமர்ஜென்சி படக்குழுவுக்கு மலினோவ்ஸ்கியை வரவேற்கிறோம்" என்று கூறினார்.
டேவிட் மலினோவ்ஸ்கி 2017 ஆம் ஆண்டு திரைப்படமான Darkest Hour இல் சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான 2018 ஆம் ஆண்டிற்கான BAFTA மற்றும் ஆஸ்கார் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். அவரது பிற படங்களான World War Z (2013) மற்றும் தி பேட்மேன் (2022) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இந்த எமர்ஜென்சி படத்தை கங்கனா ரனாவத்தே இயக்குகிறார்.
Also Read | “இவன் படம்லாம் நடிக்கிறானா..? ஹீரோயின் நயன்தாரான்னுவான் போல” - ரித்து meets வீரா.. செம ப்ரோமோ