சந்திரமுகி- 2 படத்தின் கிளைமாக்ஸ்.. பிரபல நடன இயக்குனருடன் பயிற்சியில் கங்கனா ரனாவத்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு மைசூரில் பூஜையுடன் துவங்கியது.

Advertising
>
Advertising

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | விஜய் நடிக்கும் தளபதி 67 படம் LCU-வா?.. அறிவிப்பு போஸ்டர்ல இப்படி ஒன்னு இருக்கா?..  

'சந்திரமுகி 2'  திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு & தோட்டா தரணி கலை இயக்குனர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தினை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு இயக்குகிறார். இப்படத்தில் நடிகை ராதிகா, நடிகர் வடிவேலு,நடிகர் ரவி மரியா, மனோபாலா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகையாவார். சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர்.

Images are subject to © copyright to their respective owners.

2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்தாண்டு சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு  பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி முதல் துவங்கி 40 நாட்கள் வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த  படப்பிடிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் & கங்கனா ரனாவத் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படப்பிடிப்பில் கிளைமாக்ஸ் காட்சிக்காக நடன பயிற்சியில் கங்கனா ரனாவத் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் பயிற்சியளித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Also Read | "இந்த முறை அணுகுண்டு வெடிப்பு".. தளபதி 67 படம் குறித்து முதல்முறையாக ட்வீட் செய்த அனிருத்!

தொடர்புடைய இணைப்புகள்

Kangana Ranaut dance practice for Chandramukhi 2 Climax song

People looking for online information on Chandramukhi 2, Chandramukhi 2 Climax song, Kangana Ranaut will find this news story useful.