அரசியலுக்கு வருவீங்களா?.. ரசிகரின் பரபரப்பு கேள்வி.. கங்கனா ரனாவத் அளித்த பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கங்கனா ரனாவத், டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | புது வீட்டில் தனுஷ்.. தனது ரசிகர்களை குடும்பத்துடன் வரவழைத்து சந்திப்பு! நெகிழ்ச்சியான PHOTOS  

நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர்.

கங்கனா ரனாவத், சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர். இவர், 2008 ஆம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Images are subject to © copyright to their respective owners.

'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் கங்கனா ரனாவத் பெற்றார்.

கடைசியாக கங்கனா ரனாவத், ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'தாகத்' படத்தில் நடித்து இருந்தார். கங்கனா ரனாவத் தனது அடுத்த படமான எமர்ஜென்சி படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த எமர்ஜென்சி படத்தை கங்கனா ரனாவத்தே இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

மேலும் தமிழில் பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி-2 படத்திலும் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, மனோபாலா, ரவி மரியா ஆகியோரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் கங்கனா ரனாவத், தமது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர், "உங்களை அரசியலில் எப்போது எதிர்பார்க்கலாம்?" என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கங்கனா ரனாவத், "நான் உறுதியாக சொல்ல முடியாது. சினிமா கலைஞராக இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டி உள்ளது" என கங்கனா ரனாவத் பதில் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | 4 மொழிகளில்.. பிரபல OTT-யில் ரிலீஸாகும் 'நண்பகல் நேரத்து மயக்கம்'.. எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Kangana Ranaut Answered about Her political entry

People looking for online information on Kangana Ranaut will find this news story useful.