வேலு நாச்சியார் வாழ்க்கையை படமாக்கும் கந்தசாமி பட இயக்குனர்! முழு விபரம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வீர மங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.

Advertising
>
Advertising

சுசி கணேசன்

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுசிகணேசன். தமிழில் இவர் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’, ‘விரும்புகிறேன்’, ‘கந்தசாமி’ “  திருட்டுப்பயலே " படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. தற்போது ‘திருட்டுப்பயலே - 2’ படத்தை இந்தியில் இயக்கி முடித்துள்ளார்.

சமீபத்தில் இதன் இந்தி டைட்டில்  வெளியானது. படத்துக்கு ‘தில் ஹே கிரே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் இதன் அர்த்தம், இதயத்தின் நிறம் சாம்பல்.  இந்தப் படம் தமிழில் வெளியான ‘திருட்டுப்பயலே 2 "படத்தின் நேரடி ரீமேக்காக வெளியாகவுள்ளது. இதனையடுத்து வஞ்சம் தீர்த்தாயடா எனும் புதிய படத்தை இயக்க உள்ளார்.

VIDEO: ஆர்யா தயாரிக்க..அரவிந்த் சுவாமி நடிக்க..கார்த்தி வெளியிட்ட புதிய படத்தின் கொல மாஸான டீசர்!

 

வேலு நாச்சியார்

இந்நிலையில்  வீர மங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன். இதுகுறித்து சுசி கணேசன் டுவிட்டரில் "தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய வீர மகா ராணி வேலுநாச்சியரின் வீர வாழ்க்கை  வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியை இந்நாளில் பெருமையோடு அறிவிக்கிறேன்.

சிம்பு லுக் அள்ளுது! வைரலாகும் வெந்து தணிந்தது காடு படத்தின் BTS புகைப்படங்கள்!

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர் களும்  மத்திய இணை அமைச்சர் L. முருகன் அவர்களும் வீரமங்கை வேலு நாச்சியார் அம்மையாரை நினைவுகூர்ந்து வாழ்த்தியதில் , படைப்பாளியான என் பேனா முனைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் ஆங்கிலேயர்களோடுபோரிட்டு, வென்ற முதலும் கடைசியுமான வீர தமிழச்சியின் மாவீரம் எத்தகையது என்பதை இன்றைய தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்ப்பதோடு , உலகமே கொண்டாட வைத்துவிடலாம் " என  தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி

வீர மங்கை வேலு நாச்சியாரின் பிறந்த நாளை இந்திய தேசமே கொண்டாடடும் வகையில் வேலு நாச்சியாரை நினைவு கூர்ந்து இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடியும்,   மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு  L. முருகன் அவர்களும் அவருடைய பிறந்த நாளில் அவரின் வீர சாகசங்களை நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Kandasamy film director to film the life of Velu Nachiyar

People looking for online information on கந்தசாமி, வேலு நாச்சியார், Female freedom fighter, Kandasamy, Velu Nachiyar will find this news story useful.