“அந்த வீடியோ பாத்து .. நிறைய பேரு இப்படி நெனைச்சுட்டாங்க”.. ‘கரகாட்டக்காரன்’ கனகா.. அடுத்த VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கரகாட்டக்காரன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை கனகா. தமிழில் ராமராஜன் முதல் ரஜினிகாந்த் வரை முன்னணி நடிகர்களுடன் நடித்த கனகா, அண்மையில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார்.

kanaga expalanation over first video tredning கனகா கரகாட்டக்காரன்

அந்த வீடியோவில், மீண்டும் ஒரு வேளை, தான் நடிக்க வந்தால் ஒப்பனை முதல் ஹேர்ஸ்டைல் வரை இன்றைக்கு இருப்பதற்கு தகுந்தாற்போல் பல விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்றும், அவற்றை தான் கற்க தயார் என்றும், இதேபோல் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு பகிரவும் தயார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

kanaga expalanation over first video tredning கனகா கரகாட்டக்காரன்

இந்த நிலையில்தான் மீண்டும் தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் “நான் நடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி பேசி பப்ளிசிட்டி பண்ண எண்ணி அந்த வீடியோவை பதிவிடவில்லை. நான் இதுவரை எதையும் கற்கவும் இல்லை. அன்று சொன்னது போல் புதிதாக கற்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

அவற்றை எதுவும் நான் கற்க தொடங்கவில்லை. இப்போது மீண்டும் யோசிக்கிறேன். அவற்றை புதிதாக கற்க வேண்டுமா? எனக்கு தெரிந்தது, எனக்கு நன்றாக வருவதையே வைத்துக்கொண்டு தொடரலாமா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பலரும் நான் பப்ளிசிட்டிக்காகவும், மீண்டும் நடிக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி வீடியோ பதிவிடுவதாக நினைக்கின்றனர். இதேபோல் எனக்கு வியாதி இருப்பதாகவும் நினைக்கின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் பேசியவர், “உண்மையில் நான் உங்களுடன் மீண்டும் உரையாடுவதற்காகவே இந்த தளத்திற்கு வந்தேன். அட்டகாசமாகவும் அமர்க்களமாகவும் உங்களுடன் புதிய ஒன்றை ஆலோசனையாக பெறவும், பகிரவும் முயற்சித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அந்த வீடியோ பாத்து .. நிறைய பேரு இப்படி நெனைச்சுட்டாங்க”.. ‘கரகாட்டக்காரன்’ கனகா.. அடுத்த VIDEO! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kanaga expalanation over first video tredning கனகா கரகாட்டக்காரன்

People looking for online information on கனகா, Kanaga, Trending, VideoViral, Viral will find this news story useful.