யாருப்பா இவங்க? ஒரே நாளில் ஃபேமஸ் ஆன ‘கனா காணும் காலங்கள் - சீசன் 2’ டீச்சர்! தெறிக்கும் ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Television: விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த மெகா ஹிட் தொடர் கனா காணும் காலங்கள் தொடர்.

Advertising
>
Advertising

மாணவர்களை ரசிகர்களாக கொண்ட தொடர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்கள் உள்ளனர். என்னும் கனா காணும் காலங்கள் தொடருக்கு மட்டும் ரசிகர்கள் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்களாக இருந்ததை காண முடிந்தது.

இந்நிலையில் தற்போது கனா காணும் காலங்கள் தொடரின் 2வது சீசன் விரைவில் வரவிருப்பதை குறிப்பிட்டு, அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

டிஸ்னி+ ஹாட் ஸ்டார் தமிழில்

முன்னதாக இந்த தொடர் டிஸ்னி+ஹாட் ஸ்டார் தமிழில் பிரத்தியேகமாக மீண்டும் வரவுள்ளதாக விஜய் டிவி விளம்பரம் செய்திருந்தது. இதனை அடுத்து ரசிகர்கள் இந்த தொடரினை மிகவும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். அதன்படி காணும் காலங்கள் தொடரின் 2வது சீசன் விரைவில் புத்தம் பொலிவுடன் புதுமுக நடிகர்களுடன் வெளியாகும் அறிவிப்புடன் கூடிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பள்ளிக்காலங்களை நினைவூட்டும் காட்சிகள்

இந்த ப்ரோமோவில் மாணவர்கள், ஆசிரியர்கள் என பள்ளிக்காலங்களை நினைவூட்டும் காட்சிகள் இடம் பெறுகின்றன. பள்ளிச்சீருடைகளில் பாலின பேதமின்றி, எதிர்காலம் குறித்த அச்சமின்றி ஆடிப்பாடும் இந்த மாணவர்களின் வாழ்க்கயை தொடராக பார்ப்பதற்கு இப்போதிலிருந்தே அனைவருக்குமான ஆர்வம் தொற்றிக்கொண்டுவிட்டது.

வைரல் ஆன டீச்சர்

இந்த ப்ரோமோவில் ஒரு பள்ளி ஆசிரியை இடம் பெறுகிறார். அவரை பின் தொடர்ந்து மனதை பறிகொடுக்கும் ஒரு மாணவனையும் காண முடிகிறது.

குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் வகுப்பாசிரியர் போல பார்ப்பதற்கு தோன்றும் இந்த டீச்சர் இந்த ப்ரோமோவின் மூலம் வைரலாகியுள்ளார். கனா காணும் காலங்கள் தொடரின் இந்த 2வது சீசன், டிஸ்னி + ஹாட் ஸ்டார் தமிழில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகவுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Kanaa Kaanum kaalangal Season 2 Promo Viral female Teacher

People looking for online information on Kanaa Kaanum Kaalangal, Kanaa Kaanum kaalangal Season 2 Serial, Vijay Television will find this news story useful.