90’S KIDS-க்கு அதுனா.. 2K KIDS-க்கு இது.. சும்மா அதகளம் பண்ணும் கனா காணும் காலங்கள் SEASON 2 PROMO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Television: விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் தொடர் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த மெகா ஹிட் தொடர்.

Advertising
>
Advertising

கனா காணும் காலங்கள் தொடர்

இந்த தொடரின் மூலம் பிரபலமான நடிகர்கள் இன்றும் சினிமாக்களில் நடித்து வருகின்றனர். விஜய்டிவி ரசிகர்களில் இளம் ரசிகர்களை, குறிப்பாக மாணவர்களை ரசிகர்களாக கொண்ட தொடர் என்றால் அது இந்த தொடராகவே இருந்தது. இந்நிலையில் இந்த தொடரின் அடுத்த தொடர்வரிசை எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

டிஸ்னி+ ஹாட் ஸ்டார் தமிழில்

அண்மையில் இந்த தொடர் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாகவும் இதே தொடர் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் தமிழில் பிரத்தியேகமாக வரவுள்ளதாகவும் விஜய்டிவி விளம்பரம் செய்திருந்ததை அடுத்து ரசிகர்கள் குஷி ஆகிவிட்டனர். இம்முறை யார் யார் மாணவர்கள் கேரக்டர்களில் நடிக்கவிருக்கின்றனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வமாகிவிட்டனர்.

கனா காணும் காலங்கள் சீசன்-2 ப்ரோமோ

இந்நிலையில் தற்போது கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசனுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவில் இளம் சிட்டுகளாக மாணவர்கள் சிறகடித்து ஆடவும் பாடவும் செய்கின்றனர். மாணவர்களின் தோளோடு தோள் நிற்கும் தோழி போல் ஆசிரியை ஒருவர் தோன்றுகிறார்.

எப்போது வகுப்பு முடியும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மத்தியில் ஹோம் ஒர்க் பற்றி ஆசிரியையிடம் தானாக முன்வந்து கேட்கும் மாணவரையும், அவர் அப்படி கேட்கும் போது மற்ற மாணவர்கள் அவரை கோபம் கொண்டு அடிக்கும் ஜாலியான காட்சிகளையும் ப்ரோமோவில் காணமுடிகிறது.

90S Kidsக்கு அந்த KKK... 2K Kidsக்கு KKK Season 2

இன்னும் திரைப்படங்கள் மூலம் பிரபலமான முன்னணி நடிகர்களையும் இந்த சீரியல் ப்ரோமோவில் காணமுடிகிறது. 90S Kidsக்கு கனா காணும் காலங்கள் என்றால் 2K Kidsக்கு இந்த கனா காணும் காலங்கள் சீசன்-2 என்று இப்போதே ரசிகர்கள் மிகவும் குஷியாகிவிட்டனர். இந்த சீசன் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kanaa Kaanum Kaalangal Season 2 Promo Disney+Hotstar Tamil

People looking for online information on Kanaa Kaanum Kaalangal, Kanaa Kaanum Kaalangal Season 2, Kanaa Kaanum Kaalangal Serial Vijay Tv will find this news story useful.