சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்காக இதனை செய்யும் பிரபல இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘என்.ஜி.கே’, ‘காப்பான்’ திரைப்படங்களை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் பிரபல இயக்குநர் பாடல் எழுதியுள்ளார்.

சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடன் இணைந்து நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பேனரில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்த அபர்ணா முரளி நடித்துள்ளார். மேலும்,  கருணாஸ், ஊர்வசி, ஜாக்கி ஷ்ரோஃப் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தில் சூர்யா நடித்துள்ள ‘மாறா’ கேரக்டருக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஸ்பெஷல் தீம் மியூசிக் ஒன்றை கம்போஸ் செய்திருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே, பிரபல திரைப்பட இயக்குநரும், பாடலாசிரியரும், பாடகரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ் இந்த படத்தில் பாடலாசிரியராக பணியாற்றியிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kanaa director Arunraja Kamaraj next as Lyricist for Suriya's Soorarai Pottru

People looking for online information on Arunraja Kamaraja, Soorarai Pottru, Sudha Kongara, Suriya will find this news story useful.