தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்து சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது வாரத்திற்கு ஒரு டாஸ்க் அரங்கேறி வருவதால் ஏராளமான பஞ்சாயத்தும் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.
பொம்மை டாஸ்க், ராஜாங்கமும், அருங்காட்சியகமும் டாஸ்க் உள்ளிட்ட அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.
அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் செயல்பட்டு வந்தது. சக போட்டியாளர்கள் மீது தங்களுக்கு தோன்றும் குற்றங்களை முன் வைத்து அதை வழக்காக பதிவு செய்ய வேண்டும். இதற்காக வழக்கறிஞர் ஒருவரை தேர்வு செய்து, அனைத்து போட்டியாளர்களாலும் தேர்வு செய்யப்படும் நீதிபதி முன்பு வைத்து வாதாடி அதில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் நீதிமன்ற டாஸ்க்.
இதில் பல போட்டியாளர்கள் வைத்த வழக்கு தொடர்பாக நடந்த வாதம், அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தது. பல வழக்குகளில் எதிர்பாராத வகையில் தீர்ப்பு கிடைத்திருந்த நிலையில், சில வழக்குகள் சற்று வேடிக்கையாக சிரிப்பலை மோடிலும் சென்றிருந்தது. தொடர்ந்து, இந்த டாஸ்க் முடிந்த பிறகு வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், வழக்குகளை போட்டியாளர்கள் எதிர்கொண்ட விதம் குறித்து நிறைய கருத்துக்களையும் முன் வைத்திருந்தார். அவர் குறிப்பிட்ட விஷயங்கள், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
பலரும் Safe கேம் ஆடுவதை விமர்சனம் செய்திருந்த கமல்ஹாசன், தான் ஒரு வழக்கை முன் வைப்பதாகவும் குறிப்பிட்டு எப்படி பிக்பாஸ் வீட்டில் இனி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் போட்டியாளர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதே போல, வீட்டில் யாரும் பாத்திரங்களை சுத்தமாக கழுவுவதில்லை என்ற கதிரவனின் புகார் குறித்து அவரிடமே பேசிக் கொண்டிருந்த கமல்ஹாசன், வீட்டில் Hygiene லெவல் பற்றியும் சில கருத்துக்களை சுட்டிக் காட்டி இருந்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து பேசுவதற்கு முன்பாக ராபர்ட் மாஸ்டரிடம் கமல்ஹாசன் சொன்ன Thug Life பதில், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
அனைத்து போட்டியாளர்களிடமும் பேசும் கமல், "எனக்கும் ஒரு வழக்கு இருக்கு. அத தொடுக்காம உங்கள மாதிரியே லைட்டா பண்ணிடலாம்ன்னு இருக்கேன். இந்த வழக்கிற்கான Exhibit A வெளிய தோட்டத்துல இருக்கு. அத பாத்துட்டு வாங்க, பேசுவோம்" என்கிறார்.
உடனடியாக, "எல்லாருமா சார்?" என ராபர்ட் மாஸ்டர் கேட்கிறார். அப்போது பதில் சொல்லும் கமல்ஹாசன், "வீட்டுல இருக்குறவங்க மட்டும் போனா போதும்ங்க" என Thug life பதில் கூறியதும் அரங்கத்தில் இருந்தவர்கள் கைத்தட்டி ஆர்பரிக்கவும் செய்தனர்.