'விக்ரம்' படத்திற்காக மூன்று மொழிகளில் களமிறங்கிய கமல் ஹாசன்! ரசிகர்களுக்கு சரவெடி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது.

Advertising
>
Advertising

தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மேக்கிங் வீடியோ, முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு  உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனம் மிகப்பெரிய சாதனை விலைக்கு வாங்கி உள்ளனர்.

விக்ரம் படத்தின் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உரிமத்தை ஸ்ரேஷ்த்  மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்நிறுவனம் தெலுங்கு நடிகர் நிதினுக்கு சொந்தமானது ஆகும்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன், தனது சொந்த குரலில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார். ஏற்கனவே உத்தம வில்லன் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு கமல் ஹாசன் டப்பிங் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

KamalHassan has dubbed in his own voice in 3 languages for Vikram

People looking for online information on Fahaad Fasil, Kamal Haasan, Lokesh, Vijay Sethupathy, Vikram will find this news story useful.