"மக்கள் மனச புரிஞ்சு வெச்சிருக்கீங்க!".. 3வது எலிமினேஷனை அறிவித்த கமல்ஹாசன்! #BIGGBOSSTAMIL5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது எலிமினேஷன் யார் என்பதை நடிகர் கமல்ஹாசன் தற்போது அறிவித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கிய முதலேயே மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. காரணம் வழக்கமாக, பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் தாமதமாக நடக்கும் எல்லாமே தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் விரைவாக நடக்கிறது. அதாவது சண்டை - சச்சரவுகள், குழுவாக பிரிந்து கொள்ளுதல், எலிமினேஷன் என எல்லாமே கொஞ்சம் விரைவாக நடந்து வருவதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக நமீதா மாரிமுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் திருநங்கை போட்டியாளராக மக்கள் மனதில் இடம் பிடித்து இருந்தார். அதற்கு காரணம் அவருடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களும் வேதனைகளும் என்ன என்பதை அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் கதையாகச் சொல்லி இருந்ததுதான்.

அவர் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து நீடிப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரிமுத்து, பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதாக பிக்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலாவதாக எலிமினேஷன் செய்யப்பட்ட நபராக வெளியேறினார் நாடியா. அவரை அடுத்து அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது ஆளாக வெளியேறினார். இந்த நிலையில் தற்போது மூன்றாவது எலிமினேஷன் யார் என்கிற பேச்சுகள் எழுந்து வந்தன.

இதில் நாமினேஷன் செய்யப்பட்டு ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட மூன்று பேராக சின்னபொண்ணு, அபினய் மற்றும் வருண் மூவரும் தனி அறைக்குச் சென்று அமர வைக்கப்பட்டனர். இறுதியில் சின்னப்பொண்ணு வெளியேற்றப்படுவதாக நடிகர் கமலஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

முன்னதாக, “உங்கள் மூவரில் யார் வெளியேற்றப்பட போவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கமல் கேட்டதற்கு சின்ன பொண்ணு தானாகவே கையை உயர்த்தினார். இதனை தொடர்ந்து பேசிய கமல், “நீங்கள் மக்கள் மனதை நன்றாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!” என்று சொல்லி சின்ன பொண்ணுவின் பெயரை மக்களுக்கும் சின்ன பொண்ணுவுக்கும் காண்பித்தார்.

அதன்பிறகு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெற்றதுடன், அனைவரிடமும் அழுது, கட்டியணைத்து பிரியாவிடை பெற்ற சின்ன பொண்ணு காட்டு சிறுக்கி பாடலைப் பாடினார். பின்னர் அந்த வீட்டை விட்டு வெளியேறி, நடிகர் கமல்ஹாசனிடம் மேடையில் வந்து பேசிவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திரைப்பட மற்றும் நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு சிரித்த முகத்துடன் விடைபெற்றார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhassan announced biggbosstamil5 3rd elimination vjay tv

People looking for online information on 3rd biggboss elimination, 3rd elimination, Biggboss elimination, Biggbosstamil elimination, BiggBossTamil5, Biggbosstamil5 3rd elimination, Biggbosstamil5 elimination, Elimination, Kamal, KAMALHAASAN, Kamalhassan, Vijay Television will find this news story useful.