போடு வெடிய! விக்ரம் படத்தின் முக்கிய உரிமையை வாங்கிய உலகின் முன்னணி நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Advertising
>
Advertising

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படக்குழு காரைக்குடி, பாண்டிச்சேரியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது.  பின் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ந்டைபெற்று வந்தது. 

இந்நிலையில் விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆடியோ உரிமை நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

KamalHaasan's Vikram Audio rights bagged by SonyMusicSouth

People looking for online information on Fahad Faasil, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram will find this news story useful.