BREAKING: போடு! மலையாள BIGG BOSS-ல் மோகன்லாலுடன் கமல்… SURPRISE தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் விரைவில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

Also Read | ஜொலிக்கும் செட்.. குத்து பாட்டுக்கு ஆடிய விஷால் & S.J.சூர்யா… மார்க் ஆண்டனி BTS ஃபோட்டோ

விக்ரம் ரிலீஸ்…

கமல்ஹாசன் நடிப்பில்  விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ‘விக்ரம்’ உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

எதிர்பார்ப்பை அளித்த பாடல்கள் & டிரைலர்…

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீடு சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. விக்ரம் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.  படத்தை தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்…

இந்நிலையில் கமல்ஹாசன் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் மோகன் லாலுடன் விரைவில் கலந்துகொள்ள உள்ளார் என்ற தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளது. விக்ரம் பட ரிலீஸ் நெருங்கும் நிலையில் இந்த அறிவிப்பு மேலும் உற்சாகத்தை ரசிகர்களுக்கு தந்துள்ளது. இந்த தகவல் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள கமல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக அமைந்துள்ளது.

முன்னதாக தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விக்ரம் பட வேலைகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவர் தற்போது மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.
கமல் – மோகன்லால் நட்பு…

நீண்டகால நண்பர்களாக இருந்துவரும் நடிகர்கள் கமல்ஹாசனும் மோகன்லாலும் இணைந்து உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் மோகன் லால் நடித்த திருஷ்யம் திரைப்படத்தின் ரீமேக்கான பாபநாசம் திரைப்படத்திலும் கமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் ‘தி கிரே மேன்’… டிவிட்டரில் சிறப்பான சம்பவம்

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhaasan will join with mohanlal in malayaalam bigg boss

People looking for online information on Bigg boss, Bigg Boss Malayalam, KAMALHAASAN, Mohanlal will find this news story useful.