விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் ஒன்றின் காரணமாக ஏராளமான பிரச்சனைகள் உருவாகி இருந்தது.
இதனால் கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வருகிறது. அப்படி ஒரு சூழலில் தற்போது பிக்பாஸ் வீடு வழக்கம் போல சற்று கலகலப்பாகவும் இருந்து வருகிறது.
முன்னதாக, ஷெரினாவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே தான் இருந்தனர். ஆரம்பத்தில் மணிகண்டன் கோபம் அடைய, இதன் பின்னர் டாஸ்க்கில் ஏற்பட்ட மோதலால் அசீம், தனலட்சுமி, அமுதவாணன், விக்ரமன் உள்ளிட்ட பல போட்டியாளர்களிடையே மாறி மாறி விவாதங்கள் தான் நடந்து வந்தது. இதனால் வார இறுதியில் கமல்ஹாசன் வரும் போது உண்மை என்ன என்பது தெரிய வரும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதனிடையே, புத்தம் புது லுக்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன் ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது.
ஒரு ப்ரோமாவில், ஷெரினாவை யார் தள்ளி விட்டார்கள் என்பது பற்றி அசீம், அசல் கோலார் உள்ளிட்டோரிடம் கமல் கேள்வி கேட்பது தெரிகிறது. இதன் பின்னர், தனலட்சுமியிடம் பேசும் கமல், "தப்பே பண்ணலன்னு நீங்க அவ்ளோ உறுதியா இருக்கீங்களா?" என கமல் கேட்டதும் "ஆமா சார்" என தனலட்சுமி கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து கமல் பேச, கடைசியில் குறும்படம் போட போவது பற்றியும் தெரிவிக்கிறார். இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ ஒன்றில் அசீமிடம் கோபத்துடன் கமல் கேட்கும் கேள்விகள் தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசீமிடம் பேசும் கமல், "அசீம், உங்ககிட்ட நான் எதையும் கேட்க விரும்பல. நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு எனக்கு தெரியும். நான் உங்கள விமர்சிக்கல, கண்டிக்கிறேன். யாருக்காக தெரியுமா, உங்க பையனுக்காக. இல்ல நீங்க சொல்லுங்க, இது தான் என் Strategyன்னு. அப்டினா நான் மத்தவங்க கிட்ட சொல்லணும், 'Beware' ஆப் அசீம். அவமானப்படுத்துவாரு, பாடி லாங்குவேஜ் காட்டி Mock பண்ணுவாரு. அப்படினு நீங்க தயாரா இருங்க, நீங்க செய்ய வேண்டியதை செய்ங்க, (பார்வையாளர்களை கைகாட்டி) இவங்களும் செய்ய வேண்டியதை செய்வாங்க" என கமல் தெரிவிக்கிறார்.
ப்ரோமோவும் கடும் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளதால், ரசிகர்கள் அனைவரும் எபிசோடையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.