Vijay Television: நாட்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

BiggBossTamil5: இதனை ஒட்டி ஜனவரி 16-ஆம் தேதி, ஞாயிறு அன்று இந்த கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின்போது, 5வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் வரவழைக்கப்பட்டு அமரவைக்கப்பட்டிருந்தனர். அந்த நேரத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நிரூப், அமீர் மற்றும் பாவனி மூவரும் ஒருவர் பின் ஒருவராக வெளியேற்றப்பட்டனர். பின்னர் ராஜூ மற்றும் பிரியங்கா இரண்டு பேர் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தனர்.
ராஜூ வெற்றி
அவர்களை உள்ளே சென்று சந்தித்த நடிகர் கமல்ஹாசன், அவர்களுடன் தனித்தனியே புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைப்பிடித்து அழைத்து வந்த கமல்ஹாசன், பிக்பாஸ் அரங்கத்தில் வைத்து வெற்றியாளர் யார் என அறிவித்தார். அதற்கும் முன்னதாக அனைவரையும் எதிர்பார்க்க வைத்து ஹார்ட் பீட்டை எகிற வைத்த கமல், பின்னர் ராஜூவின் கையை உயர்த்தி அவரை வெற்றியாளராக அறிவித்தார்.
50 லட்சம் ரூபாய் பரிசு
அதன் பின் ராஜூவின் தாயார் மிகவும் உருகி போனார். ராஜூவின் மனைவியும் மிகவும் எமோஷனலாகி தம் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். ராஜூ பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் வெற்றியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், அவருக்கு 50 லட்சம் ரூபாய்க்கான ரொக்கப்பரிசுக்கான காசோலை வழங்கப்படது.
Also Read: "செவரு உயரம் பத்தாது.. ஏத்தி கட்டுங்க!".. Bigg Boss OTT ப்ரோமோவுல கமல் சார் யார சொல்றாரு?
தாமரையுடன் பேசிய கமல்
வெற்றியாளர்களை அறிவிக்கும் முன்பாக, அங்கு அமர்ந்திருந்த 5வது சீசனின் மற்ற போட்டியாளர்களிடம் கமல் பேசிக்கொண்டு வந்தார். அதில், தாமரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சந்திக்கும் மக்களுடனான அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பேசிய தாமரை, “ரொம்ப சந்தோசமா இருக்குங்க சார். எனக்காகவே என் ஊர்க்காரங்க டிவி வாங்கினதா சொன்னாங்க சார், ரொம்பவே நெகிழ்ச்சியா இருக்கு என உருக்கமாக கூறினார். இதனைத் தொடர்ந்து, பேசிய கமல்ஹாசன், “நான் தான் சொன்னேனா இல்லையா? போன் வாங்கினவங்களலாம் எனக்கு தெரியும்னு!” என்று பேசினார்.
எனக்கே ஏமாற்றம் தான்..
ஏற்கனவே தாமரை வெளியேறும்போது கமல்ஹாசன், “நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தபோது, இந்த பொண்ணு எங்க ரொம்ப நாள் இருக்கப் போகுதுனு நினைச்சவங்க .. ஆனால் நீங்கள் இருந்து அனைவரயும் ஆச்சரியப்படுத்தினீர்கள். நீங்கள் நீங்களாகவே இருந்தீங்க.. ஒரு புலி, ஒரு முறம் கொண்டானு கேட்காமலேயே நீங்கள் தமிழ்ப் பெண்ணாக இருந்தீர்கள். நான் உங்களை அடுத்த வாரம்தான் பார்க்கணும்னு நெனைச்சேன். ஆனால் சிலர் அவ்வாறு நினைக்கவில்லை. எனக்கே ஏமாற்றம் தான். மற்றவர்கள் தாமதமாக சாரி கேப்பாங்க இல்ல, மன்னிப்பு கேப்பாங்க. ஆனால் 10 படம் நடிச்சவங்களுக்கு கிடைச்ச வெற்றி உங்களுக்கு கிடைத்துள்ளது!” என குறிப்பிட்டார்.
அன்றே கணித்த கமல்
மேலும் பேசியவர், “உங்களுக்கு தாமரை ஆர்மி இல்ல, சோஷியல் மீடியா பிரபலம் இல்லை நீங்கள், ஆனால் தாமரை என்கிற ஒரு பெண் பிக்பாஸில் இருக்கிறார் என்று உங்களை பார்க்கவே போன் வங்கியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள், அவர்களை நான் அறிவேன். பணப்பெட்டி வந்தாப்புறம் அந்த பணம் வேண்டாம், எனக்கு நம்பிக்கை வந்துருச்சினு சொன்னீங்க பாருங்க.. அதுதான் உங்க வெற்றிக்கான சாவி, அதை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்!” என்று பேசியிருந்தார். இந்நிலையில் கமல் சொன்னபடியே அதே அனுபவம், தாமரை செல்விக்கு பிக்பாஸ் வீட்டை விட்டு போன பிறகு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: மக்கள் மனம் வென்று மகுடம் சூடிய ராஜூ.. ஆஹா.. 4வது சீசன் வின்னர் ஆரியின் அற்புத வாழ்த்து!