"நீதிக்காக அயராது போராடியவர்!".. டிராபிக் ராமசாமி மறைவு குறித்து கமல்ஹாசன் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சோஷியல் ஆக்டிவிஸ்ட் டிராபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. 

தமிழகத்தில் பல்வேறு அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து தனிமனிதராக பல சட்டபோராட்டங்களை வழக்குகள் மூலம் முன்னெடுத்தவர் டிராபிக் ராமசாமி. இவரது வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் டிராபிக் ராமசாமி என்கிற பெயரில் திரைப்படமாக இயக்கி நடித்திருந்தார். 

குறிப்பாக சட்டத்திற்குப் புறம்பாகச் சாலைகள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண சட்டத்தையே ஆயுதமாக பயன்படுத்தி பல பொதுநல வழக்குகளை தொடர்ந்தவர் டிராபிக் ராமசாமி. இந்நிலையில் அவரது மறைவுக்கு திமுக தலைவரும் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இவரது மறைவு குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பேசிய நடிகர் கமல்காசன் "அநீதிகளை துணிச்சலாக எதிர்த்தவர் டிராபிக் ராமசாமி. பொதுநல வழக்குகள் மூலம் மக்கள் பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நீதிக்காக அயராது போராடிய டிராபிக் ராமசாமிக்கு என் அஞ்சலிகள்." என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhaasan condolence for traffic ramasamy demise

People looking for online information on Kamal Haasan, TrafficRamasamy will find this news story useful.