விக்ரமன் பேச்சை கேட்டதும் கண் கலங்கிய கமல்ஹாசன்.. மறுகணமே அவர் படிக்க தொடங்கிய கடிதம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீடு கடந்த வாரம் ஆரம்ப பள்ளியாகவும், பின்னர் மேல்நிலைப் பள்ளியாகவும், அதன் பின்னர் கல்லூரி ஆகவும் மாறி இருந்தது. இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்கள் அனைவரும் ஆசிரியர்களாகவும், மாணவர்களாகவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்திருந்த விஷயம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருந்தது. பொதுவாக ஒரு டாஸ்க் என வந்து விட்டால் பிக்பாஸில் ஏராளமான சண்டைகள் நடைபெறுவதை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

Advertising
>
Advertising

Also Read | "அசிம் அண்ணா, நீங்க கண் கலங்குனத பாத்தேன்".. வெளியேறிய பின் தனா சொன்ன வார்த்தை!!.. bigg boss tamil 6

ஆனால் கடந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் பேராசிரியர்களும் வலம் வந்ததுடன் மட்டும் இல்லாமல், மிகவும் கலகலப்பாகவும் தங்களின் பணிகளை செய்தனர். இதனால் டாஸ்க் மிகவும் உற்சாகமாக தான் சென்று கொண்டிருந்தது. அதே வேளையில் டாஸ்க் முடிந்த பின்னர் ரேங்கிங் டாஸ்க் வந்த சமயத்தில், தான் சிறப்பாக விளையாடியதாக கூறி அசிம் முதல் நம்பரில் நின்றார். இதன்பினர் இரண்டாவது இடத்தில் அமுதவாணனும் மூன்றாவது இடத்தில் தனலட்சுமியும் நின்றிருந்தனர்.

அசிம் முதலிடத்தில் நின்றது குறித்து ஷிவின், விக்ரமன் உள்ளிட்ட பலரும் பல கேள்விகளை எழுப்ப, இதற்கு அசிம் கூறியிருந்த பதில்கள் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. என்னடா இந்த வாரம் சண்டை வரவில்லை என ரசிகர்கள் எதிர்பார்த்த சூழலில் ரேங்கிங் டாஸ்கில் நடந்த விஷயங்கள் பெரிய அளவில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது.

சண்டை, கலகலப்பு என ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நிறைய உருக்கமான சம்பவங்கள் கூட பிக் பாஸ் வீட்டில் அரங்கேறி இருந்தது. தங்களின் குடும்பத்தினர் குறித்து நிறைய கண் கலங்க வைக்கும் விஷயங்களை போட்டியாளர்கள் சுற்றி இருந்து பேசி இருந்தனர். அதே போல, தங்களின் சொந்த பந்தங்களுக்கு கடிதம் எழுதி அதனை அனைவர் முன்னிலையில் படிக்கவும் செய்திருந்தனர்.

அப்போது அண்ணல் அம்பேத்கருக்கு கடிதம் எழுதி இருந்த விக்ரமன், லண்டனில் அம்பேத்கர் பட்ட கஷ்டங்களை குறிப்பிட்டும், கொஞ்சமாவது அவரை போல ஆக முயற்சிப்பேன் என்றும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், விக்ரமன் கடிதத்தை கேட்டு கண் கலங்கியதாகவும் தெரிவித்தார். அதே போல, பெரிய தகப்பன் ஒருவருக்கு விக்ரமன் கடிதம் எழுதியதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

அந்த சமயத்தில் பேசிய விக்ரமன், அம்பேத்கர் செய்த விஷயங்கள் அனைத்தையும் சக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் பேசினார். இதனைக் கேட்டதும் கமல்ஹாசன் கண் கலங்க, இறுதியில் 1990 களில், காந்திக்கு தான் எழுதிய கடிதத்தை உருக்கத்துடனும் அவர் படித்திருந்தார். அம்பேத்கர் மற்றும் காந்தி ஆகியோர் குறித்து கமல்ஹாசன் மற்றும் விக்ரமன் ஆகியோர் குறிப்பிட்டிருந்த விஷயம், பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.

Also Read | வாரிசு இசை நிகழ்ச்சியில் ஓடி வந்து உதவிய விஜய்.. நெகிழ்ச்சியில் பாடகி சொன்ன விஷயம்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhaasan broke tears after vikraman ambedkar letter

People looking for online information on Ambedkar letter, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Kamal Haasan, Vijay Television, Vikraman will find this news story useful.