விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன், 105 நாட்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பானதை அடுத்து ஜனவரி 16-ஆம் தேதி, ஞாயிறு அன்று நடந்த கிராண்ட் ஃபினாலே நடந்து முடிந்தது.

ராஜூ வெற்றி
இதில் பிரபல விஜய் டிவி நடிகரும், ஷோ புரொடியூசரும், திரைக்கதை வசன எழுத்தாளருமாக இருந்து வந்த ராஜூ டைட்டில் வின்னராக கமல்ஹாசனால் அறிவிக்கப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில் பிரபல விஜய் டிவி விஜே பிரியங்கா ரன்னர் அப்-ஆக அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் ராஜூவுக்கு வெற்றிக்கோப்பையும் 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
AlsoRead: அட.. BiggBoss வீட்ல மொத்தமா இந்த மனுசன் அழுதது இந்த ரெண்டே இடத்துல தானா? ‘கூல்’ ராஜூ பாய்!
BiggBoss OTT நிகழ்ச்சி அறிவிப்பு
இந்நிலையில் தமிழுக்கென்றே பிரத்தியேகமாக அறிமுகம் ஆகியுள்ள டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள BiggBoss Ultimate எனும் புதிய நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை சிவகார்த்திகேயனுடன் இணைந்து கமல் அறிவித்திருந்தார். அதன்படி இந்த நிகழ்ச்சியில் முந்தைய சீசன்கள் கலந்துகொண்டு விளையாடவுள்ளதாகவும் கமல் குறிப்பிட்டிருந்தார்.
BiggBoss Ultimate புதிய ப்ரோமோ
இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவில், ஊழியர்கள் செட் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அங்கு என்ட்ரி கொடுக்கு கமல் “உயரம் பத்தாது.. செவர நல்லா தூக்கி கட்டுங்க.. ஏன்னா நாம.. பாட்டுக்கு டான்ஸ் ஆடுற காலயும் பாத்துருக்கோம்.. செவுர தாண்டுற ஆளுங்களயும் பாத்துருக்கோம்!” என்று சொல்லிக்கொண்டே வந்தவர், “இப்ப வர போறவங்க வத்தியும் வெச்சிருக்காங்க வீட்டையே பத்தவும் வெச்சிருக்காங்க!” என்று கூறுகிறார்.
முந்தைய சீசன் போட்டியாளர்கள்
இந்த ப்ரோமோ சில முந்தைய சீசன் போட்டியாளர்களை நினைவுபடுத்துவதாய் தோன்றுதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர் ‘நாடோடிகள்’ புகழ் நடிகர் பரணி சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற முயன்ற சம்பவம் உட்பட பல சம்பவங்களை இந்த ப்ரோமோ நினைவூட்டுதாக இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.
24 மணி நேரமும் நேரலையில்..
மேலும் இந்த ப்ரோமோவில், “தொலைச்ச இடத்துல தான தேட முடியும்.. தோத்த இடத்துல தான ஜெயிக்க முடியும்.. This is Bigg Boss Ultimate.. விரைவில்.. நம்ம உங்களுக்கு பிடிச்ச போட்டியாளர்கள் புது வேகத்துடனும் புதுப்புது வியூகத்துடனும் வர்றாங்கா. 24 மணி நேரமும் நேரலையில் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில்” என்று குறிப்பிட்டுள்ளார்.