“அவங்க நடிப்பு ராட்சசி…” டிரைலர் பார்த்து பாராட்டிய கமல்… உற்சாகமான ‘செம்பி’ படக்குழு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செம்பி படக்குழுவினர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து விக்ரம் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | சிகிச்சைக்காக இன்று அமெரிக்கப் பயணம்….Airport-ல் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் TR

கமல்ஹாசனை சந்தித்த செம்பி படக்குழு..

கமல்ஹாசன் நடிப்பில்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக  செம்பி படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது செம்பி படத்தின் டிரைலரை கமல்ஹாசன் பார்த்து வெகுவாக பாராட்டினார்.

கோவைசரளாவுக்கு கிடைத்த பாராட்டு…

செம்பி படத்தின் தயாரிப்பாளர்கள்  ட்ரைடெண்ட் ரவீந்திரன்,  ஏ .ஆர். எண்டர்டைன்மெண்ட் ரியா , ஆடிட்டர் அக்பர் அலி, படத்தின் இயக்குநர் பிரபு சாலமன், கோவை சரளா மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர். மேலும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கோவை சரளாவை நடிப்பு ராட்சசி என்று கமல்ஹாசன் பாராட்டினார். செம்பி படத்தின் டிரைலரை கமல்ஹாசன் பாராட்டியது தங்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாகவும், படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

செம்பி…

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் தற்போது நடிகர் அஸ்வின், கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம்  ’செம்பி. இந்த படத்தை Trident Arts நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் கோவை சரளா 90 வயது பட்டியாகவும், தம்பி ராமையா பஸ் கண்டக்டராகவும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் பெரும்பாலானக் காட்சிகள் பஸ்ஸில் படமாக்கப்படுள்ளதாக தகவல்கள் வெளியாகின.  சமீபத்தில் வெளியான செம்பி படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் கோவை சரளா தன் பேத்தியோடு மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் பாட்டி வேடத்தில் நடித்திருந்தார்.

முன்னதாக கமல்ஹாசன் மற்றும் கோவை சரளா ஜோடியாக நடித்த சதி லீலாவதி திரைப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த ஒரு திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | அடுத்த 5 வருஷம்.. IPL போட்டிகளின் TV & டிஜிட்டல் OTT உரிமத்தை கைப்பற்றிய முன்னணி சேனல்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhaasan applauded Kovai sarala after watching sembi trailer

People looking for online information on KAMALHAASAN, Kovai sarala, Sembi trailer will find this news story useful.