தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்து சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது வாரத்திற்கு ஒரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்தும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.
பொம்மை டாஸ்க், ராஜாங்கமும், அருங்காட்சியகமும் டாஸ்க் உள்ளிட்ட அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் உண்டு பண்ணி இருந்தது.
அப்படி ஒரு சூழலில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்ற டாஸ்க் செயல்பட்டு வந்தது. சக போட்டியாளர்கள் மீது தங்களுக்கு தோன்றும் குற்றங்களை முன் வைத்து அதை வழக்காக பதிவு செய்ய வேண்டும். இதற்காக வழக்கறிஞர் ஒருவரை தேர்வு செய்து, அனைத்து போட்டியாளர்களாலும் தேர்வு செய்யப்படும் நீதிபதி முன்பு வைத்து வாதாடி அதில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் நீதிமன்ற டாஸ்க்.
இதில் பல போட்டியாளர்கள் வைத்த வழக்கு தொடர்பாக நடந்த வாதம், அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தி இருந்தது. பல வழக்குகளில் எதிர்பாராத வகையில் தீர்ப்பு கிடைத்திருந்த நிலையில், சில வழக்குகள் சற்று வேடிக்கையாக சிரிப்பலை மோடிலும் சென்றிருந்தது. நீதிமன்ற டாஸ்க்கின் இறுதியில், ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்சி ஆகியோர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்கள். அதே போல, வார இறுதியும் வந்து விட்டதால் இந்த வார எலிமினேஷன் குறித்தும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அப்படி ஒரு சூழலில் வார இறுதியில், போட்டியாளர்கள் முன் தோன்றிய கமல்ஹாசன் தான் வழக்கை ஒன்றை முன்வைத்து பேசிய விஷயங்கள், அதிகம் வைரலாகி வருகிறது. நீதிமன்ற டாஸ்க்கின் போது பலரும் பாதுகாப்பாக போட்டி ஆடியதாக தெரிகிறது. தொடர்ந்து தங்கள் பிக்பாஸ் வீட்டில் வெளியேறாமல், சண்டைக்கும் போகாமல் தொடர்ந்து வீட்டில் நீடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடியதையும் கமல் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பேசி இருந்த கமல்ஹாசன், தனது வழக்காக ஒரு விஷயத்தை போட்டியாளர் முன்பு எடுத்துரைத்தார். "யாரு நல்லவன் அப்படிங்குறதுல்ல இந்த போட்டி. பிக் பாஸ் போட்டி அதுவல்ல. நீங்க என்ன நினைச்சிட்டு இருந்தீங்க?. இதுல பெரிய வில்லன்னா அசீம நினைச்சிட்டு இருந்தீங்க இல்லியா. அப்ப ஏன் இன்னும் இருக்காரு அவரு?" என கமல்ஹாசன் கூறியதும் அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் கைத்தட்ட ஆரம்பித்தனர்.
தொடர்ந்து பேசும் கமல், "நல்லவனாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய பரிந்துரை. வல்லவனாக இருக்கணும்ங்குறது அவங்களோட (பார்வையாளர்கள்) எதிர்பார்ப்பு. இது இரண்டையுமே நீங்க பேலன்ஸ் பண்ணிட்டீங்கன்னா, நூறாவது நாள் அன்னைக்கு நம்ம பேச முடியும். அது யார் என்பது எனக்கு தெரியாது. நீங்க அனைவருமாக இருக்க வேண்டும் என்று உங்கள மாதிரி நானும் Safe Game விளையாடுறதா இருந்தா நீங்க அனைவருமே 100 நாள் இங்க இருக்கணும்ன்னு சொல்றது தான்.
இதுல பல பேர் விடுபட்டு போயிடுவீங்க. ஒருத்தர் தான் ஜெயிக்கப் போறீங்க. எனக்கு இதுல யாரா இருந்தாலும் சுவாரஸ்யம் குறையாது. எனக்கு இதுல ஃபேவரைட் கிடையாது. ஆச்சரியங்கள் எனக்கு நிறைய காத்திருக்கு. நான் பலமுறை இவங்க தான் கடைசி வரை வருவாங்கன்னு நினைச்சா பாதியில அவங்க போயிடுவாங்க. எனக்கு ரொம்ப புடிச்சாலும் ஏதாவது தப்பு பண்ணி, பொறுமையிழந்து முன்னாடியே போயிருவாரு. அதிலிருந்து நான் பற்றற்று இருக்க கற்றுக் கொண்டேன் இந்த விளையாட்டுல. எப்படி போகுதுன்னு பாத்துட்டு இருக்கலாம்ன்னு. நான் முயற்சி பண்றது என்னன்னா, என்னுடைய இந்த பங்களிப்பும், உங்களுடைய பங்களிப்பும் அவர்களுக்கு (பார்வையாளர்களை காட்டியபடி) சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய வழக்கு" என கமல்ஹாசன் தெரிவித்தார்.