MOST WAITING ’பத்தல பத்தல’ பாடலின் வீடியோ ரிலீஸ்… வெளியான மாஸ் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தில் இடம்பெற்ற ‘பத்தல பத்தல’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "சில்லுனு ஒரு காதல்' படத்தை 2022ல எடுத்தா பட்ஜெட் ரூ 110 கோடி".. - தயாரிப்பாளர் சூப்பர் தகவல்

விக்ரம்

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

பிளாக்பஸ்டர் ஹிட்

உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் விக்ரம் இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறத். கமலின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படங்களின் பட்டியலில் விக்ரம் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கமல் விக்ரம் படத்தின் வசூல் பற்றி பேசும் போது சூசகமாக 300 கோடி ரூபாய் என பேசியது குறிப்பிடத்தக்கது.  மேலும் 25 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதால் வசூல் 400 கோடி ரூபாயை நெருங்கும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து விக்ரம் திரைப்படம் வரும் ஜூலை 8 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.

பத்தல பத்தல

இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற chartbuster ஹிட் பாடலான பத்தல பத்தல பாடல் சமூகவலைதளங்களில் மிகப்பெரிய கவனம் பெற்றது. இந்த பாடலின் வீடியோவுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் நாளை (ஜூலை 1) இந்த பாடலின் வீடியோ வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Also Read | விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் புதிய படம்.. EXCLUSIVE அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்! இது வேற லெவல்

 

தொடர்புடைய இணைப்புகள்

Kamal vikram pathala pathala song video release update

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram will find this news story useful.