நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் அடுத்த கட்ட அப்டேட் தெரியவந்துள்ளது.
சிலநாட்களுக்கு முன் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியிலும், இரண்டாவது க்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியிலும் நடந்து முடிந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வந்தது.
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மாநகர, கைதி, மாஸ்டர் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார்.
விக்ரம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் புதன் கிழமை அன்று கோயம்புத்தூரில் தொடங்கப்படவிருப்பதாக நம்பத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் இம்முறை, இந்த கட்ட படப்பிடிப்பில் கமல், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் 3 பேரும் இணைந்து பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
விக்ரம் படத்தின் first glance அண்மையில் வெளியானது. இதனைப் பார்த்த முதலே ரசிகர்கள், இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்கிற ஆர்வம் தொற்றிக்கொண்டது.
அதற்கும் பதில் கிடைக்கும் வகையில் ‘விக்ரம்’ திரைப்பட்ம வரும் 2022-ஆம் ஆண்டு சம்மரில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற, அதே சமயம் நம்பத்தகுந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.