கமலின் 'விக்ரம்' பட ஆடியோ & டிரைலர் LANUCH எங்கே?.. எப்போது.? - LATEST தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு விக்ரம் திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | கர்ப்பமான வயிறோடு வைரல் pic! ரசிகர்களின் வாழ்த்து மழையில் நடிகை நமீதா!

விக்ரம் எதிர்பார்ப்பு…

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக  2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம்-2 படம் வெளியானது. இந்நிலையில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு அவரின் அடுத்த படமாக விக்ரம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.. மொத்தமாக 110 நாட்கள் நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னதாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

பேன் இந்தியா ரிலீஸ்…

விக்ரம் படத்தை தமிழ் சினிமாவில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கேரளாவில் சிபு தமீம்ஸ் வெளியிடுகிறார். இந்நிலையில் விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 15 ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எங்கும் நடக்கும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் லான்ச் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல் எழுதிய ’பத்தல பத்தல’ பாடல்…

ஆடியோ ரிலீஸுக்கு முன்னர் மே 11 (நாளை) ஆம் தேதியே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் தனியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ப்ரைஸாக படத்தில் கமல்ஹாசன் ‘பத்தல பத்தல’ என்ற பாடலை எழுதி பாடியுள்ளதாக அனிருத் அறிவித்துள்ளார். மேலும் பாடல் எழுதுவதற்காக அனிருத், கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. கமல்ஹாசன் இதற்கு முன்பாக பல படங்களில் பல வெற்றிகரமான பாடல்களை எழுதியும் பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

கமலின் 'விக்ரம்' பட ஆடியோ & டிரைலர் LANUCH எங்கே?.. எப்போது.? - LATEST தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal vikram movie audio launch in Nehru indoor stadium

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Nehru indoor stadium, Vijay Sethupathi, Vikram Movie, Vikram movie audio launch will find this news story useful.