விக்ரம் திரைப்படம் தெலுங்கில் ‘விக்ரம் ஹிட்லிஸ்ட்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
Also Read | “மாஸ் & க்ளாஸ்… அன்லிமிடெட் அசைவ விருந்து....” விக்ரம் படம் பற்றி பிரபல இயக்குனரின் Tweet
விக்ரம் ரிலீஸ்…
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
விக்ரம் ஹிட்லிஸ்ட்…
விக்ரம் திரைப்படம் தெலுங்கில் விக்ரம் ஹிட்லிஸ்ட் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜூன் 3 ஆம் தேதி வெளியானது. படத்தை ஸ்ரேஷ்த் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. முன்னதாக இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. ரிலீஸுக்கு முன்னதாக நடிகர் கமல்ஹாசன் ஐதராபாத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களை சந்தித்தது அதிகளவில் கவனம் பெற்றது.
வரவேற்பு…
இந்நிலையில் ரிலீஸூக்குப் பின்பு உலகம் முழுவதும் படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதை அடுத்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் விக்ரம் படத்துக்கு வார இறுதி ஓப்பனிங் சிறப்பாக அமைந்துள்ளது. முதல் 3 நாட்களில் விக்ரம் திரைப்படம் 10 கோடி ரூபாய்க்கும் மேல் மொத்தமாக வசூல் செய்துள்ளதாக ஸ்ரேஷ்த் மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் வேலைநாளான திங்கள் கிழமையும் படத்துக்கு நல்ல வரவேற்பு தொடர்வதாக அறிவித்துள்ளது. கமல்ஹாசன் மிகப்பெரிய வெற்றியுடன் திரும்பி வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது சம்மந்தமான டிவீட் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
முன்னதாக அமெரிக்காவில் விக்ரம் திரைப்படம் 3 நாட்களில் 1.7 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read | KGF, RRR, விக்ரம் போல எதிர்பாக்காதீங்க.. "கோல்ட்" படம் வேறமாரி.. அப்டேட் கொடுத்த அல்போன்ஸ் புத்ரன்!