நடிகர் கமல்ஹாசன் உடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் இணைந்துள்ளார்.

Also Read | விக்ரம் நடிக்கும் கோப்ரா.. ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ் கொடுத்த பட நிறுவனம்! தரமான அப்டேட்
சமீபத்தில் நடந்து முடிந்த 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முன்பாக, 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பாடல் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும், அந்த வீடியோவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஏ.ஆர். ரஹ்மான் தோன்றி இருந்தனர்.
அதே போல, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையும் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். அந்நிகழ்ச்சியில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள், தமிழ் பண்பாட்டை போற்றும் பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது.
அந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் பண்பாட்டின் விழுமியங்களை கூறும் வகையில் ஒரு வீடியோ ஒளிபரப்பானது.
அதில், 1200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில், தமிழர் கலை, பண்பாடு செழித்து இருந்ததற்கான சான்று, ஒன்றாம் நூற்றாண்டில் கரிகால பெருவளத்தான் சோழன் கல்லணை காட்டியது தொடர்பான வீடியோவை முப்பரிமாணத்துடன் கமலின் குரலில் திரையிடப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வின் சிறப்பம்சமாக இந்த வீடியோ கவனிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் கமல்ஹாசனுடன் தனது குழுவினர் கலந்துரையாடியது தொடர்பான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சிலநாட்களுக்கு முன் பகிர்ந்தார்.
அதில், "உலக நாயகன் கமல்ஹாசனுடன் சில மணி நேரங்கள் செலவழிக்க நேரம் கிடைத்ததை எண்ணி நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய அறிவு, அவர் அளித்த விளக்கங்கள் மற்றும் அவர் எங்களுக்கு கூறிய நுணுக்கங்கள் உள்ளிட்டவை, எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அவரது குரல் இதில் அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தி இருந்தது. நன்றி கமல் சார்" என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் உடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் 75வது சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்காக மீண்டும் இணைந்துள்ளார். தமிழ் மண் பாகம் 2 என இதற்கு பெயரிட்டுள்ளனர். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக போராட்ட வீரர்களை மையமாக வைத்து இந்த வீடியோ தயாராகி வருகிறது. கமல் சிகாகோவில் இருந்து காணொளி மூலம் கலந்து கொண்டார். விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ காட்சிகளை பகிர்ந்து உள்ளார்.
Also Read | நடிகர் அஜித் குமாரின் AK61 லுக்.. ரசிகர்கள் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!