‘அவருனு நெனைச்சுட்டேன்.. ’.. பிரபல நடிகரின் பெயர் கொண்ட ரசிகரிடம் ட்விட்டரில் பேசிய கமல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | BREAKING: 'கடைசி விவசாயி' இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி? OTT ரிலீஸா? முழு தகவல்

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்த நிலையில் ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசனிடம் மௌலி எனும் ரசிகர் ஒருவர், “அசீம் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் திருநங்கைகள் குறித்து உடல்மொழி கேலி பண்ணிய விவகாரத்தை கமல்ஹாசன் பிக்பாஸ் அரங்கில் பேசியது ஒவ்வொரு இல்லத்திலும் சென்று சேர்ந்திருக்கிறது. இது உண்மையில் சிறப்பான ஒன்று. அதுபோல் கமல் சார் அத்துடன் நிற்கவில்லை. அவர் ஏடிகேவை எழுப்பி அனைவரையும் போல நடித்து காண்பிக்க கூறியிருந்தார். அசீம், மணிகண்டன் செய்ததற்கும், ஏடிகே செய்ததற்கும் உள்ள வித்தியாசத்தை அங்கேயே பிரித்து புரிந்து கொள்ளும்படியாக செய்தார்” என்று பாராட்டியிருந்தார்.

இதற்கு நன்றி சொன்ன கமல்ஹாசன், “வன்மம் இன்றி நகைச்சுவையை எப்படி சொல்ல வேண்டும், ஒருவரை அவமானப் படுத்தாமல் எப்படி நகைச்சுவையை செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு எல்லாம் கற்றுக் கொடுத்த தலைவர் நீங்கள்.. எங்களுக்கெல்லாம் இன்ஸ்பிரேஷன்.. உங்களைப்போல ஒரு ஜென்டில்மேனின் அடுத்த வரிசையில் நாங்கள் நிற்கிறோம் என்பதில் எங்களுக்கு பெருமை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு அந்த ரசிகர் மௌலியோ, “தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது போல் தெரிகிறது. ஆனால் என்னுடைய மெசேஜ் தங்களை வந்தடைந்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இதை கோருகிறேன், திரை உலகத்தில் நீங்கள் தொடர்ந்து மாற்றுப் பாலின வகுப்பொடுக்க சமூகத்தினர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு மீண்டும் கமல் பதில் அளித்திருந்தார். அதன்படி, “இயக்குனரும் மூத்த நடிகருமான திரு மௌலி என தவறுதலாக நினைத்து விட்டேன்.  இருந்தாலும் தங்களுடைய பாராட்டுக்கு நன்றி!” என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

இயக்குனர் நடிகர் என பன்முகம் கொண்ட மௌலி, நடிகர் கமல்ஹாசன் நடித்த பம்மல் கே சம்பந்தம் திரைப்படத்தை இயக்கியவர். மாதவன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்த நள தமயந்தி திரைப்படத்தையும் இயக்கியவர். தவிர பல நாடகங்களை இயக்கிய மௌலி, தமிழ் சீரியல்களிலும் தோன்றியிருக்கிறார். அவரைப் பற்றிதான் நடிகர் கமல்ஹாசன் பெருமிதத்துடன் மேற்கண்ட கமெண்ட்களில் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "புயல் அடிக்க போகுது".. ஷாருக்கான் & தீபிகா படுகோனே நடிக்கும் 'பதான்'.. அதிரடியான தமிழ் டீஸர்!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal responds to wrong mouli mistakenly viral tweets

People looking for online information on Bigg boss 6 tamil, Kamal hassan, Kamlhaasan, Mouli, Vijay Television, Vijay tv will find this news story useful.