லோகேஷ் கனகராஜுடன் விக்ரம் என்கிற கேங்க்ஸ்டர் படத்திற்காக கமல் இணைந்துள்ளார்.
இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதனிடையே அண்மையில் நடிகர் கமல்ஹாசன் முன்னதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியான தசாவதாரம் படத்தின் நினைவலைகளை பகிர்ந்திருந்தார்.
அப்போது கமல்ஹாசனிடம் தசாவதாரம் படம் பிஎச்டி என்றால், மைக்கேல் மதன காம ராஜன் படம் ஒரு டிகிரி கோர்ஸ் என குறிப்பிட்டிருந்ததுடன், “மைக்கேல் மதன காம ராஜன்” படத்தின் உருவாக்கம் பற்றி விளக்க முடியுமா என கேட்டிருந்தார்.
அதற்கு கமல்ஹாசன் இப்போது பதிலளித்துள்ளார். அதில், “நன்றி, அல்போன்ஸ் புத்திரன். விரைவில் செய்வேன். இதுஉங்களுக்கு எவ்வளவு கற்றல் என்று எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை, நான் குறிப்பிட்டது போல், ஒரு மாஸ்டர் வகுப்பு. பல ஆண்டுகளுக்குப் பிறகு அதைப் பற்றி பேசுவது எனக்கும் புதிய பாடங்களைக் கற்பிக்கும்!” என பதில் அளித்தார்.
மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம், 1990 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம், சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய இப்படத்துக்கு கமல்ஹாசன் கதை எழுத, கிரேஸி மோகன் வசனங்களை எழுதியுள்ளார். இப்படத்தில் ரூபினி , குஷ்பூ மற்றும் பலருடன் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்துள்ளார். மனோரமா, டெல்லி கணேஷ், நாசர், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ். என். லட்சுமி, ஜெயபாரதி என பலரும் நடித்துள்ளனர்.
ALSO READ: 'போடு ரகிட ரகிட!'.. தனுஷை இயக்கும், முதல் படத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநர்!