REPEAT MODE-ல் கமல் & அனிருத் மேஜிக் ‘பத்தல பத்தல’… MILESTONE வியூஸ்… லேட்டஸ்ட் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டாகின.

Advertising
>
Advertising

Also Read | Behindwoods Gold Medals விருது நிகழ்வில் அடுத்த சர்ப்ரைஸ்… பீஸ்ட் பூஜா ஹெக்டே Live perfomance.

விக்ரம் ரிலீஸ்…

கமல்ஹாசன் நடிப்பில்  விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ‘விக்ரம்’ உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

அனிருத்- கமல் ’பத்தல பத்தல’…

இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கமல்- அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் நேற்று இரவு 7 மணிக்கு வெளியானது. இந்த பாடலைக் கமலே எழுதிப் பாடியுள்ளார். இது கமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாடல் வெளியான பின்னர் சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பாடலில் கவனிக்கவைத்தவை…

பத்தல பத்தல பாடல் கமலின் ஹிட் பாடலான அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற ‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலை நினைவூட்டும் விதமாக அமைந்திருந்தது. அந்த பாடலில் வருவது போலவே பத்தல பத்தல பாடலில் கமல் தனது பாணியில் வடசென்னை தமிழில் பாடி இருந்தது ரசிகர்களைக் கவர்ந்தது. அதுபோலவே பாடலின் இடையில் வரும் சில அரசியல் கருத்துகளும் சமூகவலைதளங்களில் கவனிக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக பாடலின் இடையில் கமல் நடனமாடும் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதில் கமலின் நடனம் ரசிகர்களைக் கவர பலரும் அதுபோலவே தாங்களும் ஆடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர்.

மைல்ஸ்டோன் பார்வைகள்…

இதனால் பல ரசிகர்களும் இந்த பாடலை ரிப்பீட் மோடில் கேட்டுவருவதாக தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் வெளியாகி சில நாட்களுக்குள்ளாகவே இந்த பாடல் யுடியூபில் 25 மில்லியன் பார்வைகளை தற்போது கடந்துள்ளது. இதை சோனி ம்யூசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த பாடல் போலவே படத்தின் மற்ற பாடல்களும் தீம் இசையும் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Kamal pathala pathala crossed 25 million views

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Pathala pathala song, Vijay Sethupathi, Vikram Movie will find this news story useful.