கமலிடம் பாராட்டு வாங்கிய நபர்.. வெடித்த பட்டாசு மிச்சங்களை வைத்து இப்படி ஒரு விஷயமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் சாமானியரின் செயலை பாராட்டி பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் கமல். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இவர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் தற்போது கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பாராட்டு பதிவை வெளியிட்டுள்ளார். ஹபீஸ் கான் என்பவர் வெடித்த பட்டாசு குழல்களை கொண்டு சிறிய செடி தொட்டிகளை உருவாக்கியுள்ளார். இதை பாராட்டி பதிவிட்ட கமல், ''வீதியில் கிடக்கும் வெடித்த பட்டாசுக் குழல்களைச் சேகரித்து, மரவெடிகளாக மாற்றும் ஹபீஸ் கானின்  சமயோசிதமும் சமூக அக்கறையும் பாராட்டுக்குரியவை. இந்த அசலான பசுமை வெடிகளை வாழ்நாள் முழுக்க வெடிக்கலாம்'' என பாராட்டியுள்ளார். 

இதையடுத்து ஹபீஸ் கானின் செயலுக்கு இணையத்தில் லைக்ஸ் குவிந்து வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

கமலிடம் பாராட்டு வாங்கிய நபர் | Kamal hassan appreciates this common man for his work

People looking for online information on Hafees Khan, Kamal Haasan will find this news story useful.