பிக்பாஸ் சீசன் 3 நேற்று (23.06.2019) தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தனது தனித்துவமான பாணியில் தொகுத்து வழங்கி அனைவரையும் கவர்ந்தார்.

இந்த சீஸனில், ஃபாத்திமா பாபு, ரேஸ்மா, லோஸ்லியா, சாக்ஸி அகர்வால், மதுமிதா, கவிண், அபிராமி வெங்கடாச்சலம், சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், ஷிரின், மோகன் வைத்தியா, தர்ஷன் சாண்டி, முகேஷ் ராவ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் சுற்றிக்காட்டிய கமல், தண்ணீர், சமையல் எரிவாயு குறித்து கட்டுப்பாடு உள்ளதாக கூறினார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோ ஒளிபரப்பானது.
இந்த புரொமோவில் பாத்திமா பாபு தண்ணீர், எரிவாயு பயன்படுத்துவது குறித்து பேசி இது அவலமானது இதற்கு கைத்தட்டக்கூடாது என்று கோவமாக பேசுகிறார். இதற்கு சேரன் விளக்கம் கொடுக்க முயல்கிறார். இது முதல் சண்டை ஏற்படக்காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.