BREAKING: கமல்ஹாசன் ஆளவந்தானாக மீண்டும் அவதாரம் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆளவந்தான்'. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.

சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்ய, ஷங்கர் - இஷான்- லாய் கூட்டணி இசையமைத்திருந்தது. இந்த படத்தில் ரவீனா, மனீஷா கொய்ராலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 

இந்த படத்தில் கமல், மேஜர் விஜய் குமாராகவும், நந்து என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞராகவும் நடித்திருந்தார். இரண்டு வேடங்களுக்கும் வித்தியாசமான பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி என ரசிகர்களை பிரம்மிக்க வைத்தார்.

இந்நிலையில் இந்த படம் தற்போது அமெரிக்காவில் சவுண்ட் உள்ளிட்ட பணிகள் Remaster செய்யப்பட்டு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் தாணுவிடம் பேசிய போது, இந்த செய்தியை உறுதி செய்தார். மேலும் இந்த படம் தற்போதைய தலைமுறையினரையும் வெகுவாக கவரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இந்த படம் சுவாரஸியமாகவும், விறுவிறுப்பகாவும் இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் அறிவுறுத்தலுடன் அவர் படத்தை 2 மணி நேர படமாக ட்ரிம் செய்துள்ளாக தெரிவித்துள்ளார்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan's Alavanthan movie rerelease on theatres Mid 2020

People looking for online information on Aalavandhan, Kalaippuli S Thanu, Kamal Haasan, V Creations will find this news story useful.