"உங்கள் வெற்றிப் பயணம்.." ரஜினிக்கு தனது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

Advertising
>
Advertising

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்.. ஒரே வரியில் வாழ்த்தி அசத்திய நடிகர் தனுஷ்..

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.  'அண்ணாத்த' படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது அடுத்த 169வது படத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுடன் பணிபுரிகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது.

இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடுவதையொட்டி அவருக்கு ரசிகர்கள் & அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் வாழ்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தன்னுடைய டிவீட்டில் "அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்." என கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். இந்த டிவீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & கமல்ஹாசன் இணைந்து 11 படங்களில் (கேமியோ பாத்திரம் தவிர்த்து) நடித்துள்ளது குறிப்படத்தக்கது.

 

Also Read | ஜெயிலர் படத்தில் ரஜினி கேரக்டர் பெயர் இது தான்! போஸ்டருடன் வெளியான சூப்பர் தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Wishes Super Star Rajinikanth Birthday

People looking for online information on Kamal Haasan, Kamal Haasan Wishes Rajinikanth Birthday, Rajinikanth, Super Star Rajinikanth will find this news story useful.