'PS1' படத்திற்காக முழு IMAX தியேட்டரையும் புக் செய்த கமல்? கூட இவங்க வேறயா? செம்ம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "இவங்க தான் என் அம்மா அப்பா தங்கச்சி".. குடும்பத்தை அறிமுகம் செய்த ராஷ்மிகா மந்தனா!

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” வெளியானது முதல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் லைகா நிறுவனம் குறிப்பிட்டிருந்தனர்.

பொன்னியின் செல்வன்  படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், கிஷோர், சோபிதா, ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும்   நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படம் ஐமேக்ஸ் 3டி வடிவத்திலும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், சென்னையில் உள்ள ஜாஸ் சினிமாஸ் திரையரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இன்று இரவு 7  மணி காட்சியை ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் ஐமேக்ஸ் 3டி வடிவத்தில் கண்டு களிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ஒட்டுமொத்த இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read | விஜயதசமி வாழ்த்துடன் தந்தை ரஜினிகாந்த்தின் புது லுக் Photo-வை வெளியிட்ட ஐஸ்வர்யா ..

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan will Watching Ponniyin Selvan Movie in IMAX 3D with PS1 Cast

People looking for online information on IMAX 3D, Kamal Haasan, Maniratnam, Ponniyin Selvan 1 will find this news story useful.