கீழ்ப்பாக்கம் அருகே சில தினங்களுக்கு முன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்த மருத்துவர் அந்த நோய் பாதிப்புக்குள்ளாகி மரணம் அடைந்தார்.
இவர் உடலை அப்பகுதிக்கு அண்மையில் உள்ள மயானத்தில் புதைக்க கொண்டு சென்றபோது அங்கு வசிக்கும் மக்கள் ஒன்றுகூடி வழிமறிக்க அமளியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தங்கள் பகுதியில் உடலை புதைக்க அனுமதிக்காத அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நிலையை தீவரப்படுத்தினர். முடிவில் உடலை எடுத்தவந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் போலீசார் விவகாரத்தில் தலையிட வேண்டிய நிலை உருவானது.
நோயுற்றவர்களுக்காக உயிரைக் பணையம் வைத்து பணியாற்றிய மருத்துவரின் இறுதி மரியாதைக்கு இடையூறு உருவாக்கிய இந்த சம்பவம் கடும் விமர்சங்களுக்கு உள்ளானது. இந்த சம்பவத்தின் போது உடனிருந்த மருத்துவர் ஒருவர் தன் மனவேதனையை வீடியோவாக வெளியிட்டுருந்தார்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல், ‘கொல்லும் கொரோனா கூட சாதி, மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ, நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் ‘ என்று தெரிவித்துள்ளார்.