பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லருக்காக கமல்ஹாசனுடன் முன்னணி நடிகர்கள் மற்றும் எழுத்தாளர் களமிறங்கி உள்ளனர்.
Also Read | "சரியான தொல்லையப்பா".. 'PS1' ஜெயராம் கேரக்டருக்கு 'வந்தியத்தேவன்' கார்த்தியின் வைரல் கமெண்ட்!
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.
முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா இன்று செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள் விளையாட்டரங்கில் இதற்கான நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கு ரஜினிகாந்த் & கமல்ஹாசன் வருகை தர உள்ளனர். மேலும் இந்த படத்தின் தமிழ் டிரெய்லர் கமல்ஹாசனின் பின்னணி குரலுடன் அமைந்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் முறையே அணில் கபூர், ராணா, எழுத்தாளர் ஜெயந்த் கைகினி, பிரித்வி ராஜ் ஆகியோர் குரலில் அமைந்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து பிரபல OTT நிறுவனமான டென்ட்கொட்டா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை பிரபல சரிகம சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
Also Read | ‘உறியடி’ விஜய்குமாரின் புதிய படம்.. டைரக்டர் இவரா? வெளியான தெறி அப்டேட்..