விக்ரம் படத்தின் அமெரிக்க தியேட்டர் உரிமம்.. வாங்கிய பிரபல வினியோகஸ்தர் இவங்க தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் பல்துறை வித்தகராகவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர் கமல்ஹாசன்.

Advertising
>
Advertising

2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம்-2 படம் கமல் நடிப்பில் வெளியானது. அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து, அவரின் அடுத்த படமாக விக்ரம் படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் மிரட்டலான ஒலிப்பதிவு.. செம்ம வீடியோவுடன் வெளியான வேறலெவல் UPDATE!

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக விக்ரம் படத்தின் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படத்துக்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தார் லோகேஷ். அதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா பாதிப்புகளால் அவ்வப்போது படப்பிடிப்பில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் கமல், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய மூன்று பிஸியான நடிகர்களை வைத்து மும்முரமாக படப்பிடிப்பை நடத்திவந்தார் லோகேஷ். மொத்தமாக 110 நாட்கள் நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னதாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி, 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. தமிழகத்தில் முன்னணி வினியோக நிறுவனமான ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தின் அமெரிக்க நாட்டு தியேட்டர் உரிமத்தை பிரைம் மீடியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விக்ரம் படத்தின் ப்ரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. படத்தின் போஸ்டர் விளம்பரங்கள் வரையப்பட்ட ரயில் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு சில நாட்கள் முன்னர் சென்றது கவனத்தை ஈர்த்தது. விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 15 ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

விக்ரம் படத்தின் அமெரிக்க தியேட்டர் உரிமம்.. வாங்கிய பிரபல வினியோகஸ்தர் இவங்க தான்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Vikram Movie USA Rights Bagged by Prime Media

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Prime Media, Vijay Sethupathi, Vikram Movie, Vikram Movie USA Rights will find this news story useful.