ரிலீஸ்க்கு முன்பே BOX OFFICE வசூலில் மாஸ் காட்டிய 'விக்ரம்'.. வெளியான OFFICIAL தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"விக்ரம்" படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read  | புதிய கொலமாஸ் ஸ்டில்களுடன் வெளியான விக்ரம் Title Track லிரிக் வீடியோ! எப்படி இருக்கு?

இந்தப் படத்திற்கு  ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.விக்ரம் படத்தின் சண்டைக்காட்சியில் பாண்டம் (Phantom) கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாண்டம் கேமரா புரட்சிகரமான அதிவேக கேமரா ஆகும், இதில் FPS (வினாடிக்கு பிரேம்கள்) 1000 இலிருந்து தொடங்கி சராசரியாக 76000 FPS வரை படங்களை படம் பிடிக்க முடியும்.

  கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக நாளை ஜூன்-3 அன்று வெளியாகிறது.

தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு  உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனம் மிகப்பெரிய சாதனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் விக்ரம் படத்தின் அமெரிக்கா உரிமையை பிரைம் மீடியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் விக்ரம் படம் அமெரிக்காவில் மட்டும் 891 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தமிழ் மொழியில் 415 திரையரங்குகளிலும், தெலுங்கு மொழியில் 326 திரையரங்குகளிலும், இந்தி மொழியில் 150 திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆகிறது. 

இதற்கான டிக்கெட் முன்பதிவு ரிசர்வேஷன் தொடங்கி வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. டிக்கெட் முன்பதிவில் மட்டும் விக்ரம் படம், 250 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இந்திய மதிப்பில் ரூபாய் 1.93 கோடியை முன்பதிவில் வசூலித்து உள்ளது.

Also Read  | பிரசன்னா - அபர்னா - ரெஜினா நடித்த வெப் - சீரிஸ்.. பிரபல OTT-யில் ரிலீஸ்! எப்போ? எதுல?

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Vikram Movie USA Box Office Collection

People looking for online information on Kamal Haasan, Vikram Box Office, Vikram FDFS, Vikram Movie, Vikram Movie USA Box Office Collection will find this news story useful.