சென்னை: கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ரிலீசுக்காக உதயநிதியுடன் கமல் இணைந்துள்ளார்.
காத்துவாக்குல ரெண்டு காதல்.. Two Two பாட்டுல இதான் சமந்தா - நயன்தாரா கெட்டப்பா? வைரல் PHOTOS
கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், முன்னோட்ட வீடியோ, மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காரைக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது. பின் இந்த படத்தின் இரண்டாவது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவை ,பாண்டிச்சேரியில் நடந்தது. கடந்த டிசம்பரில் தொடங்கிய இறுதிக்கட்ட படப்பிடிப்பு (02.03.2022) அன்றுடன் நிறைவடைந்தது.
விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக BIGGEST ACTION ENTERTAINER என்ற அடைமொழியுடன் ஜூன்-3 அன்று வெளியாகும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் தயாரித்துள்ள விக்ரம் படத்தின் ஒட்டு மொத்த தமிழக வினியோகஸ்த உரிமையையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை விக்ரம் படக்குழு அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
அட்ரா சக்க..பீஸ்ட் படத்தின் கேரளா தியேட்டர் உரிமம்... கைப்பற்றிய தனுஷ் பட தயாரிப்பாளர்