'விக்ரம்' படத்தில் ROLEX GETUP-க்கு இவங்க தான் காரணம்.. நடிகர் சூர்யாவின் வைரல் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரை வைத்து லோகேஷ் விக்ரம் படத்தை இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | A.R ரஹ்மான் மகள் திருமண விழா.. கலந்து கொண்ட அஜித் குடும்பத்தினர்! தீயாய் வைரலாகும் ஃபோட்டோஸ்

‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.

விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார்.

உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார். நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் ‌வாட்சை பரிசளித்தார். இந்த வாரம் விக்ரம் படம் இரண்டாவது வாரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் பாத்திரத்தில் நடித்த சூர்யா, படத்தில் தனக்கு மேக்கப் போட்ட மேக்கப் உமனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதில், "விக்ரம் படத்தின் ரோலக்ஸ் லுக்கிற்கு இவர் தான் காரணம்"  என பதிவிட்டுள்ளார்.

Also Read | கமல் - லோகேஷை சந்தித்த சிரஞ்சீவி & சல்மான் கான்! இதுதான் காரணமா? வைரலாகும் போட்டோக்கள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Vikram Movie Rolex Suriya Getup

People looking for online information on Kamal Haasan, Suriya, Vikram Movie, Vikram Movie Rolex Suriya Getup will find this news story useful.