'விக்ரம்' படத்தின் OTT ரிலீஸ்.. ப்ரோமோ வீடியோவை இயக்குனது இந்த பிரபலமா? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் அளித்த வாக்குறுதிப்படி கமல்ஹாசன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | இங்கிலாந்து சாலையில் ரசிகர்களை சந்தித்த நடிகர் அஜித்.. இணையத்தை கலக்கும் செம போட்டோஸ்!

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் OTT ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.வரும் ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று விக்ரம் படம் 5 மொழிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

இதனை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கமல்ஹாசன் தோன்றியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்தின் விளம்பர படங்களை இயக்கி ஒளிப்பதிவு செய்தவர் ஆவார். கடைசியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்கள்  சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தின் தமிழக வசூலினை அதிகாரபூர்வமாக கூறியுள்ளார். அதன் படி விக்ரம் படம்  தமிழகத்தில் 75 கோடி ரூபாயை ஷேராக வசூலித்துள்ளது என அறிவித்துள்ளார்.

இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது. 25வது நாளைக் கடந்தும்  விக்ரம் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடுகிறது.

சில நாட்களுக்கு முன், விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கி சுடும் காட்சிகளை எடுக்கும் முன் கமல்ஹாசன் புஷ் அப் எடுக்கும் வீடியோவை லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Also Read | Most Waiting ’பத்தல பத்தல’ பாடலின் வீடியோ ரிலீஸ்… வெளியான மாஸ் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Vikram Movie OTT Release Video Rathna Velu ISC

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram Movie OTT Release will find this news story useful.