கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர்.
படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது.
முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார்.பின்னர் நடிகர் பஹத் பாசிலும் விக்ரம் பட படப்பிடிப்பில் இணைந்து கொண்டார்.
படத்தில் பங்கு பெறும் CAST & CREWவை இறுதி செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்ட படக்குழுவினர். தற்பொழுது "விக்ரம்" படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடிக்க இளம் நடிகர் 'காளிதாஸ் ஜெயராமை' ஒப்பந்தம் செய்துள்ளனர். இதை அதிகாரப்பூர்வமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இவர் நடித்த 'மீன்குழம்பும் மண்பானையும்' படத்தில் கமல்ஹாசன் கௌரவ வேடத்தில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிகர் ஜெயராமனின் மகனாவார். Ente Veedu Appuvinteyum (2003) படத்திற்காக நடிப்பிற்கு தேசிய விருது பெற்றவர் ஆவார். இவர் தமிழில் ஒரு பக்க கதை, புத்தம் புது காலை, பாவக்கதைகளில் நடித்துள்ளார்.