"மாஸ்டர் விஜய் JD VIBES".. 'விக்ரம்' படத்தின் புது போஸ்டர் பற்றி சொன்ன பிரபல இயக்குனர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடித்த திரைப்படம் மாஸ்டர்.

Kamal Haasan Vikram Movie New Poster Master JD Vijay Vibes
Advertising
>
Advertising

Also Read | பிரபல நடிகையின் மர்ம மரணம்.. வீட்டை பரிசோதித்த போலீசாருக்கு கிடைத்த பரபரப்பு ஆதாரம்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்தார். கடந்த 2020 ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. பின் மாஸ்டர் படம் கடந்த வருடம் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. இந்த படத்தை விஜய்யின் மாமாவான சேவியர் பிரிட்டோ தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

Kamal Haasan Vikram Movie New Poster Master JD Vijay Vibes

 இந்நிலையில் நேற்று வெளியான விக்ரம் படத்தின் புதிய போஸ்டரிலும் கமல் குடித்துவிட்டு போதையில் இருக்கும் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை முகநூலில் பகிர்ந்த இயக்குனர் - வசனகர்த்தா ரத்ன குமார், "JD Vibes எனக்கு மிகவும் பிடித்த விக்ரம் பட போஸ்டர் இது" என கூறியுள்ளார்.

ரத்ன குமார் விக்ரம், மாஸ்டர் பட வசன கர்த்தா ஆவார். மாஸ்டர் & விக்ரம் படங்களின் போஸ்டரை கோபி பிரசன்னா வடிவமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

"விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.  இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

Also Read | நயன்தாரா - பிரித்வி ராஜ் இணையும் புதிய படம்.. அல்போன்ஸ் புத்ரன் போட்ட வைரல் ட்வீட்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Vikram Movie New Poster Master JD Vijay Vibes

People looking for online information on Kamal Haasan, Master JD Vijay Vibes, Vikram Movie, Vikram Movie New Poster will find this news story useful.