கமல்ஹாசனும் பஹத் பாசிலும்... இது வேற லெவலுங்கோ! வைரலாகும் விக்ரம் பட BTS புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: விக்ரம் படத்தின் கமல்ஹாசன் - பகத் பாசில் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.

Advertising
>
Advertising

விக்ரம் படக்குழு

கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

விக்ரம் பட ரிலீஸ்

கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காரைக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது.  பின் இந்த படத்தின் இரண்டாவது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவை ,பாண்டிச்சேரியில் நடந்தது. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக கமலுடன் தான் இருக்கும் BTS புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். 

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... "இப்போ ரெடி" கெத்தாக அறிவித்த த்ரிஷா!

தற்போது ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 31 வரை இடைவிடாத படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 14 -17 வரை பொங்கலுக்காக மட்டுமே ஷூட்டிங் பிரேக் விடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆடியோ உரிமை நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படம் வரும் 2022 மார்ச் 31 ஆம் தேதி தியேட்டரில் ரிலிசாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்ரம் - பகத் பாசில்

சில நாட்களுக்கு முன் விக்ரம் படத்தில் இயக்குனரும், பிரபல நடிகருமான சந்தான பாரதி இணைந்துள்ளார். இதனை படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட BTS புகைப்படத்துடன் படக்குழு டிவிட்டரில் அறிவித்தது.  இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட BTS புகைப்படம் வைரலாகி வருகிறது. உடற்பயிற்சி கூடத்தின் பின்னணியில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது. BTS புகைப்படத்தில் கமலுடன் ரசிகர்கள் எடுத்த புகைப்படமும் அடக்கம்.

2021-ல் உலகின் மிகச்சிறந்த 25 படங்கள்... இடம் பிடித்த ஆறு இந்திய திரைப்படங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Vikram Movie BTS Image went viral

People looking for online information on கமல்ஹாசன், விக்ரம், BTS Image, Kamal Haasan, Vikram Movie will find this news story useful.