விக்ரம் படத்தின் 25வது நாள்.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட இதுவரை காணாத மாஸ் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் 25 வது நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Advertising
>
Advertising

Also Read | Photo: அஜித்குமாரின் AK61 பட ஷூட்டிங்.. வெளியான மஞ்சு வாரியரின் செம்ம சூப்பர் லுக்!

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்கள்  சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தின் தமிழக வசூலினை அதிகாரபூர்வமாக கூறியுள்ளார். அதன் படி விக்ரம் படம்  தமிழகத்தில் 75 கோடி ரூபாயை ஷேராக வசூலித்துள்ளது என அறிவித்துள்ளார்.

இதுவரை வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது. விக்ரம் படத்தின் 25வது நாளையொட்டி லோகேஷ் கனகராஜ் இதுவரை காணாத புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் கமல்ஹாசன் துப்பாக்கிகளுக்கு நடுவே கை வைத்து நிற்பது போல் புகைப்படம் அமைந்துள்ளது. இந்த போஸ்டரை டிசைனர் கோபி பிரசன்னா வடிவமைத்துள்ளார்.

Also Read | வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம்.. ஹீரோயின் இந்த முன்னணி இளம் நடிகையா? ஆஹா

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Vikram Movie 25th Day Official Poster Released by lokesh Kanagaraj

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram Movie, Vikram Movie 25th Day Official Poster will find this news story useful.